மூங்கில்துறைப்பட்டு பூவாத்தம்மன் கோவிலில் பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது

மூங்கில்துறைப்பட்டு பூவாத்தம்மன் கோவிலில் பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது உண்டியலை உடைத்தபோது போலீசார் கையும் களவுமாக பிடித்தனர்

Update: 2021-12-05 15:42 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுதி தலைமையிலான போலீசார் அரும்பராம்பட்டு பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அங்கு உள்ள பூவாத்தம்மன் கோவிலில் 2 மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை திருடி கொண்டிருந்ததை பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பகுதியைச் சேர்ந்த மாயக்கண்ணன் மகன் ராம்குமார்(வயது 21) மற்றும் 18 வயது வாலிபர் என்பதும், உண்டியலை உடைத்து பணத்தை திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் திருடிய பணம் ரூ.570-ஐ பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்