திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

திருக்கோவிலூரில் லாட்டரி சீட்டு வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது

Update: 2021-12-05 15:31 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்று வந்த கீழையூர் பொங்கமேட்டுத்தெருவைச் சேர்ந்த பச்சமுத்து மகன் தமிழ்ச்செல்வன் (வயது 31) என்பவரை திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவரது குற்ற செயலை தடுக்கும் வகையில் தமிழ்செல்வனை குண்டர் தடு்ப்பு சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஜியாவுல் ஹக் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதைஏற்று கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின் பேரில் தமிழ்ச்செல்வனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதுபற்றி சிறையில் இருக்கும் தமிழ்செல்வனிடம் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்