கொக்குமேடு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம்

கொக்குமேடு கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதால் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.

Update: 2021-12-05 12:50 GMT
பொன்னேரி அருகே உள்ள மெதூர் ஊராட்சிக்கு உட்பட்டது கொக்குமேடு கிராமம். இந்த கிராமத்தில் டிரான்ஸ்பார்மர் ஒன்று உள்ளது. இதன் மூலம் வீடுகளுக்கு ஊராட்சியின் ஆழ்துளைக்கிணறு மோட்டார் மற்றும் விவசாய பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த டிரான்ஸ்பார்மர் மழை காரணமாக கடந்த 11-ந்தேதி பழுதானது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டு குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து பொன்னேரி மின் வாரியத்திடம் புகார் செய்தும் பலன் ஏதுமில்லை. இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் ராட்சத ஜெனரேட்டர் ஒன்று கொண்டுவந்து மின் உற்பத்தியை தொடங்கி மின் இணைப்பு வழங்கினார்.

இதனால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்