விஷம் குடித்து விவசாயி தற்கொலை

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2021-12-05 12:34 GMT
விஷம் குடித்தார்

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிக்கு நீண்ட நாட்களாக வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனமுடைந்த நிலையில் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.

சாவு

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உத்திரமேரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்