எட்டயபுரம் அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்

எட்டயபுரம் அருகே வீடுபுகுந்து இளம்பெண்ணுக்கு கொலைமிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-12-05 12:02 GMT
எட்டயபுரம்:
எட்டயபுரம் அருகே காடல்குடி கிழக்கு தெருவை சேர்ந்த சுப்புசாமி மகன் கருப்பசாமி (வயது 46). இவர் அங்கு ஒரு இளம்பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சல் போட்டவுடன், கருப்பசாமி அவரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பெயரில் காடல்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லத்துரை வழக்குப்பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தார்.

மேலும் செய்திகள்