வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை
வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.
சென்னையை அடுத்த பெருங்குடி அம்பேத்கர் புரட்சி நகர் சோமசுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் வைரவமூர்த்தி (வயது 27). என்ஜினீயர். இவருடைய மனைவி சுமித்ரா (23). இவர்களுக்கு திருமணமாகி 10 மாதங்களே ஆகிறது.
திருமணத்துக்கு முன்பு கந்தன்சாவடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த வைரவமூர்த்தி, அந்த வேலையை விட்டுவிட்டு வேறு வேலை தேடி வந்தார். ஆனால் எந்த வேலையும் கிடைக்காததால் மனம் உடைந்த வைரவமூர்த்தி, 2 நாட்களுக்கு முன்பு மனைவியை அவரது அக்கா வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
இந்தநிலையில் வீட்டில் உள்ள தனது அறையில் வைரவமூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.