சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் வருங்கால வைப்பு நிதி குறை தீர்க்கும் கூட்டம்
சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர்-1 சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-;
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சென்னை வடக்கு மண்டலம் சார்பில் பிராந்திய அலுவலக வளாகத்தில் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான குறை தீர்க்கும் கூட்டம் ‘உங்களுக்கு அருகில் வருங்கால வைப்புநிதி' (நிதி ஆப்கே நிகத்) என்ற பெயரில் வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடத்தப்பட உள்ளது.
சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் தங்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை வைத்திருக்கும் சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள், பணியாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குறைகளை தீர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.