மானூர்:
மானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் போலீசார் நேற்று ராமையன்பட்டி- வேப்பங்குளம் விலக்கு பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்தவரை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் அவரது சட்டைப்பையில் தலா 10 கிராம் எடை கொண்ட 2 கஞ்சா பொட்டலங்கள் இருந்ததும், மொபட்டில் 2 கிலோ கஞ்சாவை கடத்தி சென்றதும் தெரிய வந்தது. விசாரணையில், அவர் மானூர் அருகே செட்டிகுறிச்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்ற மடத்தான் (வயது 62) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, கஞ்சாவையும், மொபட்டையும் பறிமுதல் செய்தனர்.