விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

விஷம் குடித்து வாலிபர் தற்கொலை;

Update: 2021-12-04 20:48 GMT
புதுக்கடை:
தேங்காப்பட்டணம் அருகே பனம்கால் முக்கு பகுதியை சேர்ந்தவர் லாசர். இவருடைய மகன் ஜெனித் (வயது 23). 10-ம் வகுப்பு முடித்த இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
மேலும் போலீஸ் பணிக்கு செல்ல முயற்சி மேற்கொண்டார். ஆனால் அதில் தோல்வியே கிடைத்தது.
இந்தநிலையில் மிகவும் மனமுடைந்த நிலையில் இருந்த ஜெனித் வீட்டில் விஷம் குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்