வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
வீடுகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி
கொல்லங்கோடு:
ஏழுதேசம் பேரூராட்சிக்கு உட்பட்ட காஞ்சாம்புறம் புல்லுவிளை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஒரு மாதமாக இந்த தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதில் கழிவுநீரும் கலந்துள்ளது. இந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் அங்குள்ள மக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் சுத்தமான குடிநீரும் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். எனவே வெள்ளத்தை வெளியேற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.