கோவில்பட்டி சிறை டாக்டர் ஆஜராகி சாட்சியம்

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணையில் ேகாவில்பட்டி சிறை டாக்டர் ஆஜராகி சாட்சியம் அளித்து உள்ளார்.

Update: 2021-12-04 20:20 GMT
மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கு நேற்று மதுரை மாவட்ட முதலாவது செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கில் கைதான போலீஸ்காரர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அப்போது, கோவில்பட்டி சிறை டாக்டர் வெங்கடேஷ் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வருகிற 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து ஜெயராஜ் மனைவி செல்வராணி தரப்பு வக்கீல் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜெயராஜ்-பென்னிக்ஸ் இருவரும் கோவில்பட்டி சிறைக்குள் வரும்போது அவர்களின் உடலில் காயங்கள் இருந்தன. அந்த காயங்களால் அவர்கள் இருவரும் உயிரிழந்ததற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம் என்று சாட்சியம் அளித்துள்ளார். வருகிற 8-ம் தேதி கோவில்பட்டி சிறை அரசு டாக்டர் பாலசுப்பிரமணியன் சாட்சியம் அளிக்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்