மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது குண்டர் சட்டம்

மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2021-12-04 20:08 GMT
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் மகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த தந்தையை கடந்த 2-ந்தேதி அரியலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதனை கலெக்டர் ரமணசரஸ்வதி ஏற்று, மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தையை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை போலீசார் அளித்தனர்.

மேலும் செய்திகள்