பள்ளி தாளாளர், மனைவி சிறையில் அடைப்பு

பள்ளி தாளாளர், மனைவி சிறையில் அடைப்பு;

Update: 2021-12-04 19:28 GMT
திருச்சி, டிச.5-
திருச்சி மேல வண்ணாரப்பேட்டையில் உள்ள சி.இ. நடுநிலைப் பள்ளியில் வண்ணாரப்பேட்டை பாரதிநகரை சேர்ந்த ஜேம்ஸ் (வயது 52) என்பவர் தாளாளராகவும், முதல்வராகவும் இருந்து வருகிறார். அதே பள்ளியில் அவரது மனைவி ஸ்டெல்லா மேரி (52) நிர்வாகியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் 14 வயது மாணவி 8-ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும் அப்பள்ளியில் அவர் தனது சகோதரர்கள் மற்றும் சகோதரியுடன் பள்ளி விடுதியில் தங்கியுள்ளார். அவர்களுக்கு பெற்றோர் இல்லை. அவர்கள் தங்களது அத்தையின் பராமரிப்பில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பள்ளி தாளாளர் ஜேம்ஸ், 14 வயது மாணவியை பள்ளியின் ஆவண காப்பக அறையில் வைத்து  பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தாளாளரின் மனைவியான ஆசிரியை ஸ்டெல்லா மேரியிடம் தெரிவித்தார், ஆனால் அவர், அம்மாணவியை திட்டியதுடன், அவரது உடன்பிறப்புகளுடன் பள்ளியிலிருந்து வெளியே அனுப்பி விட்டார். இந்த விஷயத்தை மாணவி, தனது அத்தையிடம் தெரிவித்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார்தெரிவிக்கப்பட்டது.போலீஸ்உதவிகமிஷனர்சுப்பிரமணியன்,இன்ஸ்பெக்டர் மீராபாய் ஆகியோர் தாளாளர் ஜேம்ஸ் மற்றும் பாலியல் தொல்லைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஸ்டெல்லா மேரி மீதும் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அன்று இரவு இருவரும் திருச்சி மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் ஜேம்ஸ், திருச்சி மத்திய சிறையிலும், ஸ்டேல்லா மேரி பெண்கள் கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்