அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வாராகி பூஜை

அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் வாராகி பூஜை

Update: 2021-12-04 19:14 GMT
திருச்சி, டிச.5-
கொரோனா வைரசை தொடர்ந்து தற்போது புதிதாக ஒமைக்ரான் வைரஸ் உலகளவில் வேகமாக பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஒமைக்ரான் வைரஸ் பொதுமக்களிடையே பரவாமல் இருக்க வேண்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை அருகே காவிரி ஆற்றில் சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் வாராகி பூஜை செய்தார். அனுசம், கேட்டை நட்சத்திரங்களுக்கு உகந்த நாளான நேற்று இடுப்பளவு தண்ணீரில் அவர் நின்றபடி தலையில் வாராகி அம்மனை வைத்தபடி இந்த பூஜைகளை செய்தார். ஒமைக்ரான் வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சமடையாமல்  இருப்பதற்காகவும், விவசாயம் செழிப்பதற்காகவும், காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரவேண்டியும் இந்த பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்