சிறுமியை பலாத்காரம் செய்ததொழிலாளிக்கு ஜெயில்

15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டு ஜெயில்

Update: 2021-12-04 18:52 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சேத்தூர் கட்டபொம்மன் நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 33).  கூலித்தொழிலாளி. கடந்த 12.2.2014-ல், 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து சேத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தனசேகரன், கூலித்தொழிலாளி முருகேசனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தார்.

மேலும் செய்திகள்