கிணற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவன் பலி
தோகைமலை அருகே 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தான்.
தோகைமலை,
10-ம் வகுப்பு மாணவன்
தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஊராட்சி மேலகம்பேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 42). இவருடைய மகன் நவீன்குமார் (16). இவர் முத்தம்பட்டி அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்க சென்ற நவீன்குமார் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் தோட்டத்திற்கு சென்று பார்த்துள்ளனர். பின்னர் இளைஞர்கள் சிலர் கிணற்றில் குதித்து பார்த்தபோது நவீன்குமார் கிணற்றில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
பிரேத பரிசோதனை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் நவீன் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.