ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்
ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்
தண்டராம்பட்டு
ஏரியை ஆக்கிரமித்து பயிரிடப்பட்ட நெல் கரும்பு பயிர்கள் அகற்றம்
தண்டராம்பட்டு அருகே பெருங்குளத்தூர் ஊராட்சியில் 216 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி நிலத்தை ஆக்கிரமித்து நெல், கரும்பு, மரவள்ளி பயிரிடப்பட்டு இருந்தது.
இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் மழைக்காலங்களில் ஏரி முழுவதும் நிரம்பாததோடு பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு பாதிப்பு உருவானது. இதனையடுத்து நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற அரசு உத்தரவிடப்பட்டது.
அதன்படி பெருங்குளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார். நேற்று உதவி பொறியாளர் அறிவழகன், சர்வேயர் உமாநாத், கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலம் ஆகியோர் ஏரியின் ஆக்கிரமிப்பு பகுதியை அளவீடு செய்தனர்.
அப்போது ஏரிக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவில் நெல், கரும்பு, மரவள்ளி ஆகியவை பயிரிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து பொக்லைன் எந்திரம் உதவியுடன் ஏரிப் பகுதியில் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் அகற்றப்பட்டது.