வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 பேர் கைது
கீழ்பென்னாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நகைகள் திருட்டு
கீழ்பென்னாத்தூர் திருவண்ணாமலை ரோட்டில் வசிப்பவர் ஆறுமுகம் (வயது 70), ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர்.
உடல்நிலை சரியில்லாமல் இருந்த இவர் சிகிச்சைக்காக வீட்டைப் பூட்டிக்கொண்டு பெங்களூருவில் உள்ள மகன் மூவேந்தன் வீட்டிற்கு மனைவியுடன் சென்றிருந்தார்.
இதனை அறிந்த மர்ம நபர்கள் கடந்த 6 நாட்களுக்கு முன்பு இரவு ஆறுமுகத்தின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பீரோவை உடைத்து நகைகளை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆறுமுகம் வீட்டிற்கு வந்தார். பின்னர் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி மேற்பார்வையில், பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி, கீழ்பென்னாத்தூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன், முனீஸ்வரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, தனிப்பிரிவு ஏட்டு கோடீஸ்வரன் மற்றும் போலீசார் திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
2 பேர் கைது
இதனையடுத்துஆறுமுகத்தின் அக்கம்பக்கம் மற்றும் எதிரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது திருட்டு நடந்த இடத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் தெரிந்தது. இதையடுத்து போலீசார் கீழ்பென்னாத்தூர் பகுதியில் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது ராஜாதோப்பு செல்லும் சாலையில் வசிக்கும் துரை (40), குளக்கரை தெருவில் வசிக்கும் திருநாவுக்கரசு (44) ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டது தெரியவந்தது.
போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தியதில், ஆறுமுகம் மற்றும் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த திருமலை ஆகியோரின் வீடுகளில் பூட்டை உடைத்து நகைகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 10 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னா துரை, திருநாவுக்கரசு ஆகிய 2 பேரையும் போலீசார் திருவண்ணாமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.