அரண்மனை சிறுவயல் மாற்றுப்பாதை துண்டிப்பு
சருகணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரண்மனை சிறுவயல் அருகே மாற்றுப்பாதை துண்டிக்கப்பட்டது.
சிவகங்கை,
சருகணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அரண்மனை சிறுவயல் அருகே மாற்றுப்பாதை துண்டிக்கப்பட்டது.
உயர்மட்ட பாலம்
சிவகங்கை மாவட்டம் கல்லலில் இருந்து காளையார் கோவில் செல்லும் வழியில் அரண்மனை சிறுவயல் என்ற இடத்தில் சருகணி ஆற்றில் உயர்மட்ட பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் செல்ல மாற்றுப் பாதை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. சருகணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த மாற்றுப்பாதை அடித்து செல்லப்பட்டு விட்டது.
இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சிவகங்கை தொகுதி எம்.எல்.ஏ. செந்தில் நாதன், ஆவின் சேர்மன் அசோகன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஜெயலலிதா பேரவை செயலாளர் சண்முக சுந்தரம், மாவட்ட கவுன்சிலர் அண்ணாதுரை, ஊராட்சி தலைவர் சேகர், மகளிர் அணி அமைப்பாளர் ஜாக்குலின் ஆகியோர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
கோரிக்கை
அந்த பகுதி மக்கள் எம்.எல்.ஏ.விடம் விரைவில் உயர்மட்ட பாலத்தை கட்டி தரவேண்டும் என்றும் அதுவரை மாற்று பாதை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.