உளுந்தூர்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
உளுந்தூர்பேட்டை பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு
உளுந்தூர்பேட்டை
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளையொட்டி உளுந்தூர்பேட்டை பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். கோவில் வளாகம் உள்பிரகாரம் மற்றும் பக்தர்கள் ஓய்வு மண்டபம் என அனைத்து பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.
தொடர்ந்து உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரத்தில் உள்ள மேலும் 2 சிவன் கோவில்கள், சுங்கச்சாவடி மற்றும் ரெயில் நிலையத்திலும் போலீசார் சோதனை நடத்தினர். மேலும் முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.