பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணம் கொள்ளை
கழுகுமலையில் பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கி பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கழுகுமலை:
கழுகுமலை- சங்கரன்கோவில் ரோட்டில் கந்தசாமி என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் பங்கில் வேலைசெய்த கழுகுமலை அண்ணா புதுத்தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியம் மகன் அங்குராஜ் (வயது 20) என்பவரை பின்புறத்தில் அரிவாளால் தாக்கி விட்டு ரூ.15 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.