கிராம மக்கள் பஸ் மறியல் செய்ய முயற்சி
கிராம மக்கள் பஸ் மறியல் செய்ய முயன்றனர்.
திருப்புவனம்,
திருப்பாச்சேத்தி போலீஸ் நிலையம் அருகே உள்ளது மாசிலா மணி நகர். இந்த பகுதியில் வரத்து கால்வாயில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றாததால் தற்போது பெய்த மழையாலும் கண்மாய் நீர்வரத்தாலும் இப்பகுதியை சுற்றிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்று வர சிரமப்படுவதாகவும் கூறி இப்பகுதியை சேர்ந்த மக்கள் திடீரென திருப்பாச்சேத்தியில் உள்ள மதுரை- பரமக்குடி நான்கு வழிச்சாலை டோல்கேட் அருகே பஸ் மறியல் செய்ய முயற்சி செய்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வந்து மக்களிடம் சமரசம் பேசி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன் பேரில் மக்கள் கலைந்து சென்றனர்.