ரூ.6¼ கோடிக்கு தங்க பத்திரம் விற்பனை இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பிடித்தது

ரூ.6¼ கோடிக்கு தங்க பத்திரம் விற்பனை இந்திய அளவில் நாமக்கல் கோட்டம் முதலிடம் பிடித்தது

Update: 2021-12-04 17:02 GMT
நாமக்கல்:
நாமக்கல் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்திய அரசின் தங்க பத்திரம் திட்ட முதலீடு கடந்த நவம்பர் மாதம் 29-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை அனைத்து தபால் நிலையங்களிலும் நடைபெற்றது. ஒரு கிராம் தங்கத்தின் மதிப்பு ரூ.4,791 என்று நிர்ணயம் செய்து விற்பனை செய்யப்பட்டது.
நாமக்கல் அஞ்சல் கோட்டத்தில் 13 ஆயிரத்து 219 கிராம் தங்க பத்திரம் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நாமக்கல் கோட்டமானது முதலிடம் பெற்று சாதனை படைத்து உள்ளது. 5 நாட்களில் நடைபெற்ற மொத்த முதலீட்டின் மதிப்பு ரூ.6 கோடியே 33 லட்சத்து 32 ஆயிரத்து 229 ஆகும்.அடுத்தடுத்து வரக்கூடிய தங்க பத்திரம் முதலீட்டில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்