காருக்குள் பிணமாக கிடந்த தொழிலாளி
காருக்குள் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 40). கட்டிட தொழிலாளி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழைய கார் ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இந்நிலையில் காருக்குள் நேற்று முன்தினம் இரவு தூங்கச் சென்ற கணேசன் நேற்று காலை பிணமாக கிடந்தார். இதுகுறித்து வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மூச்சுத் திணறல் ஏற்பட்டு கணேசன் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.