தியாகதுருகம் தேவபாண்டலம் பகுதி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

தியாகதுருகம் தேவபாண்டலம் பகுதி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

Update: 2021-12-04 16:42 GMT

கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் அருகே சித்தலூர் கிராமத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி பால், தயிர், இளநீர், தேன் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன் கோவிலை வலம் வந்து மண்டபத்தில் நடுவில் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் அமர வைக்கப்பட்டார். தொடர்ந்து அம்மனுக்கு தாலாட்டு நடைபெற்றது. இதில் பானையங்கால், வேங்கைவாடி, குடியநல்லூர், விருகாவூர், முடியனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர். 

அதேபோல் சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் பெரியநாயகி அம்மன் கோவிலில் அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து செவ்வாடை அணிந்து பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி கோவிலை 3 முறை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்