திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரேநாளில் 81 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-12-04 16:34 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 18 வயது நிரம்பியவர்கள், 17¼ லட்சம் பேர் உள்ளனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடக்கிறது. இதற்காக 12 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. எனினும் 2¾ லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று 13-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதையொட்டி அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி பஸ்-ரெயில் நிலையங்கள், கடைவீதிகள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் என மொத்தம் 921 இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்தது. இதன் விளைவாக நேற்று ஒரே நாளில் 81 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்