வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வால்பாறை வாழைத்தோட்டம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு;

Update: 2021-12-04 16:23 GMT
வால்பாறை

வால்பாறையில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. நேற்று மாலையில் வால்பாறை நகர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும், அக்காமலை புல்மேடு, அக்காமலை எஸ்டேட், கருமலை எஸ்டேட் ஆகிய பகுதிகளில் கனமழையும் பெய்தது.

இந்த கனமழையால் வால்பாறை பகுதி மக்களுக்கு குடிதண்ணீர் வழங்கும் அக்காமலை தடுப்பணை நிரம்பி வழிந்தது. இதனால் கருமலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிக்கு நடந்து செல்லும் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

 மேலும் கருமலை, வாழைத்தோட்டம் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் குளிர் காரணமாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர்.

மேலும் செய்திகள்