ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைகாலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைகாலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
வால்பாறை
ஆனமைலை புலிகள் காப்பகத்தில் மழைகாலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
கணக்கெடுப்பு பணி
வால்பாறை அட்டகட்டியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பக வனமேலாண்மை பயிற்சி மையத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக வனப்பகுதியில் தேசிய புலிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி பருவமழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று பயிற்சியுடன் தொடங்கியது. இதனை ஆனைமலை புலிகள் காப்பகத்தின் துணை கள இயக்குனர் கணேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறுகையில், கணக்கெடுப்பு விவரங்களை உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள செல்போன்களில் நவீன தொழில்நுட்ப அடிப்படையில் பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டக்கூடிய வன பணியாளர்கள் சிறப்புமாக செயல்பட வேண்டும் என்றார்.
8 நாட்கள் நடக்கிறது
ஆனைமலை புலிகள் காப்பகத்தில் 4 வனச்சரக பகுதிக்கு உட்பட்ட 32 வனச்சுற்றில் 62 நேர்கோட்டில் மொத்தம் 8 நாட்கள் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெறுகிறது. இதில் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள், நகக்கீரல்கள், நேரடியாக வனவிலங்குகளை பார்ப்பது போன்ற பணிகள் நடைபெறுகிறது.
இந்த பயிற்சியில் பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரக வனப் பணியாளர்களும் காசிலிங்கம், மணிகண்டன் ஆகிய வனச்சரகர்களும் கலந்து கொண்டனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை பயிற்சி மையத்தின் உதவிப் பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் புகழேந்தி, வனவர் முனியாண்டி ஆகியோர் செய்திருந்தனர்.