ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி காரணமாக அட்டகட்டி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு

ஒமைக்ரான் வைரஸ் எதிரொலி காரணமாக அட்டகட்டி சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு

Update: 2021-12-04 16:22 GMT
வால்பாறை

கோவை மாவட்டத்தில் வால்பாறை முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு வெளிமாவட்டங்கள் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். 

இதற்கிடையில் தற்போது கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் வைரசாக பரவி வருகிறது.  இதனால் வால்பாறையில் ஒமைக்ரான் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

இதன்படி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வால்பாறைக்கு வருபவர்கள் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளார்களா? காய்ச்சல், சளி உள்ளிட்ட ஏதேனும் அறிகுறி உள்ளதாக என்று வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் உள்ள அட்டகட்டி வனத்துறை சோதனைச்சாவடியில் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. 

இதில் கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு, சோதனைச்சாவடியிலேயே தடுப்பூசி போடப்படுகிறது. ஏற்கனவே தமிழக-கேரள எல்லையில் வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர், போலீசார் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்