கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டுப்பன்றிகள்

கொடைக்கானல் ஏரிச்சாலையில் உலா வந்த காட்டுப்பன்றிகளால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.

Update: 2021-12-04 15:50 GMT
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டெருமைகள் மற்றும் காட்டுப்பன்றிகள் அதிகளவில் உள்ளன. இவை அடிக்கடி நகர் பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன அத்துடன் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று பகலில் ெகாடைக்கானல் ஏரிச்சாலையில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக உலா வந்தன. 
இதனால் பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் அச்சம் அடைந்தனர். சுமார் அரை மணி நேரம் வரை சாலையில் சுற்றித்திரிந்த காட்டுப்பன்றிகள் பின்னர் பொதுமக்கள் அதிகளவில் கூடியவுடன் அருகிலுள்ள வனப்பகுதிக்குள் சென்று விட்டன. இதனிடையே நகருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வரும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்