தீயில் கருகி பாலிெடக்னிக் மேலாளர் பலி

மொபட்டுக்கு பெட்ரோல் போட்டபோது பாலிடெக்னிக் மேலாளர் தீயில் கருகி இறந்தார்.

Update: 2021-12-04 13:44 GMT
ஜோலார்பேட்டை

மொபட்டுக்கு பெட்ரோல் போட்டபோது பாலிடெக்னிக் மேலாளர் தீயில் கருகி இறந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 56). இவர் திருப்பத்தூர் அருகே தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சாந்தி என்கின்ற மனைவியும் ராகவன், பிரதீப், ஆகிய 2 பிள்ளைகள் உள்ளனர்.
சம்பவத்தன்று இரவு தனது மொபட்டுக்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்ேபாது தீப்பொறி பறந்து வந்து விழுந்ததில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராஜவை அந்த பகுதியில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு உடல்நிலை மோசமான நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு ராஜா அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜா பரிதாபமாக இறந்தார்.

அவர் போதையில் இருந்தபோது மொபட்டுக்கு பெட்ரோல் போட்டதில் தீவிபத்து ஏற்பட்டு இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது இதில் மர்மம் உள்ளதா என்பது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
==========

மேலும் செய்திகள்