மறியலில் ஈடுபட்ட 71 பேர் மீது வழக்கு
மறியலில் ஈடுபட்ட 71 பேர் மீது வழக்கு
நெல்லை:
நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று முன்தினம் சி.ஐ.டி.யு. கட்டுமான தொழிலாளர் நலச்சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக கட்டுமான தொழிலாளர் நலச்சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் உள்பட 71 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.