மீனாட்சி அம்மன் சன்னதி பள்ளியறை படிகளுக்கு ரூ.19 லட்சத்தில் வெள்ளி தகடுகள்

மீனாட்சி அம்மன் சன்னதி பள்ளியறை படிகளுக்கு ரூ.19 லட்சத்தில் வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டு உள்ளது.

Update: 2021-12-03 20:06 GMT
மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன்கோவிலில் மூலவர் சன்னதியில் பள்ளியறைக்கான படிகள் மற்றும் கல் பீடங்கள் பித்தளை தகடால் பதிக்கப்பட்டு இருந்தது. அதனை அகற்றி வெள்ளி தகடுகளை பதிக்க உபயதாரர் ஒருவர் முன்வந்தார். அதன்படி படிகள் மற்றும் கல் பீடங்கள் அனைத்துக்கும் 29 கிலோ வெள்ளியை தகடுகளாக மாற்றி கலைநயம் மிக்க வேலைப்பாடுகளுடன் தயார் செய்து பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் மதிப்பு ரூ.19 லட்சம் ஆகும். இதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று நேற்று நிறைவு பெற்றன.

மேலும் செய்திகள்