தென்னை மரக்கன்றுகளை வெட்டியவர் மீது வழக்கு
மூதாட்டிக்கு சொந்தமான தென்னை மரக்கன்றுகளை வெட்டியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
குளித்தலை,
குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் மருதாயி (வயது 65). இவருக்கும் குளித்தலை அருகே உள்ள கணேசபுரம் கவட்டவாரி பகுதியை சேர்ந்த சக்திவடிவேல் (46) என்பவருக்கும் இடையே நிலப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று மருதாயிக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த 5 தென்னை மரக்கன்றுகளை சக்திவடிவேல் வெட்டியுள்ளார்.
இதுகுறித்து கேட்ட மருதாயியை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதுகுறித்து மருதாயி அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் சக்திவடிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.