கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி. மங்காடு பகுதியை சேர்ந்தவர் ஜான் பிரைட்சிங் (வயது 29). இவரது மனைவி ஏஞ்சலின் (27). இவர் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு ஜான் பிரைட்சிங் வீட்டில் இருந்து கொண்டு அருகே வசிக்கும் ஒரு பெண்ணிடம் செல்போனில் பேசி கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைக்கண்ட ஏஞ்சலின் ‘எதற்காக எதிர்வீட்டு பெண்ணுடன் பேசுகிறீர்கள்’ என கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜான்பிரைட்சிங் மனைவியை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த ஏஞ்சலினை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.