சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல்

சாராய வேட்டைக்கு சென்ற போலீசார் மீது தாக்குதல்;

Update: 2021-12-03 17:43 GMT
வேலூர்

அணைக்கட்டு அடுத்த சோழவரம் வனப்பகுதியில் வேலூர் மதுவிலக்கு போலீசார் நேற்று சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மலையில் ஒரு கும்பல் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. போலீசாரை கண்டதும் அந்த கும்பல் போலீசார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதில் போலீஸ்காரர் சுரேஷ் என்பவர் மீது கற்கள் பட்டு படுகாயம் அடைந்தார். அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வேலூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்