ஆற்காடு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையின் காரணமாக பெரும்பாலான ஏரிகள் நிரம்பி உள்ளன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு ஆற்காடு அடுத்த சர்வந்தாங்கல் ஏரிக மதகில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரியில் இருந்த நீர் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பூங்கொடி, ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி ஆகியோர் பணியாளர்களை கொண்டு பொக்லைன் மூலம் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் மணல் மூட்டைகளை அடுக்கி சரிசெய்தனர்.