மூலனூர் பள்ளியில் திருட்டு

மூலனூர் பள்ளியில் திருட்டு

Update: 2021-12-03 16:42 GMT
மூலனூர், 
மூலனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 1-ந்தேதி தாளாளர் செல்லமுத்து அவர் தனது அலுவலக அறையை பூட்டிவிட்டு சென்றார். 
 அதனை அடுத்து நேற்று முன்தினம் காலை பள்ளியின் அலுவலக அறையை திறக்க சென்றபோது அலுவலக அறையில் இருந்த கேமரா ஹார்டு டிஸ்க் மற்றும் பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த செல்லமுத்து மூலனூர் போலீ்ஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் பள்ளியில் பணத்தை திருடிச்சென்ற மர்ம ஆசாமியை  போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்