உடன்குடியில் 12 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது

உடன்குடியில் 12 நாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது

Update: 2021-12-03 16:16 GMT
உடன்குடி:
உடன்குடி பகுதியில் தொடர்ந்து 12 நாட்கள் குடிதண்ணீர் சப்ளை பாதிக்கப்பட்டது. ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு விற்பனை செய்வதால் பொதுமக்கள் கடும் அவதிபடுகின்றனர். உடன்குடி பகுதிகளில் உள்ள மக்களுக்கு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமாகவும், திருச்செந்தூர் எல்லப்பன்நாயக்கன் குளத்தில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டு குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகின்றனர். ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது 2 நாட்களுக்கு ஒரு முறை என வழக்கமாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. தற்போது இப்பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அனைத்து குளங்கள், குட்டைகள் முழுமையாக நிரம்பியதால் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் தண்ணீரும், எல்லப்பன்நாயக்கன் குளத்து தண்ணீரும் உடன்குடி நகர பகுதிக்கு வரவில்லை. இதனால் நேற்று 12-வது நாளாக குடிநீர் சப்ளை செய்யப்படாததால், குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சில தனி நபர்கள் லாரி மூலம் ஒரு குடம் குடிநீர் ரூ.10-க்கு விற்பனை செய்கிறார்கள். வெள்ள பெருக்கு குறைந்தால் தான் குடிதண்ணீர் சப்ளை சீராகும் என்று குடிநீர் வடிகால் வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்