தூத்துக்குடியில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை;
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள பூப்பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 49). மீனவர். இவர் குடும்பத்தகராறு காரணமாக வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.