ஊட்டி
நீலகிரி மாவட்டம் ஊட்டி அசெம்பிளி தியேட்டரில் 3-வது குறும்பட விழா நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் எஸ்.பி.அம்ரித் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் 3-வது முறையாக குறும்பட விழா தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இதில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளின் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.
மேலும் பழங்குடியினர் தொடர்பான திரைப்படங்களும் திரையிடப்படுகிறது. எனவே அனைவரும் குறும்படங்களை கண்டு களிக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட சுற்றுலா அலுவலர் உமாசங்கர், ஊட்டி தாசில்தார் தினேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.