போலீஸ் ஏட்டு கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
போலீஸ் ஏட்டு கைது; நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
பந்தலூர்
கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முத்தங்கா வனப்பகுதியில் எருமாடு போலீஸ் ஏட்டு சிஜூ(வயது 38) நாட்டுத்துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்றதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் அவர் வேட்டைக்கு கொண்டு சென்ற துப்பாக்கியை பந்தலூர் தாலுகா கையுன்னி அருகே கீழ்காரக்கொல்லியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
உடனே அங்கு முத்தங்கா உதவி வனபாதுகாவலர் சுனில்குமார் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு நடத்தினர். பின்னர் குழி தோண்டி புதைத்து வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தன்ர. மேலும் சிஜூவை கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? எ்னறு விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் நீலகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் கேரள வனத்துறையினர் வந்து நடவடிக்கை எடுத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.