பிறந்தநாளில் மரக்கன்று நடும் மாணவர்கள்
மரப்பாலம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பிறந்தநாளில் மாணவர்கள் மரக்கன்று நடும் நடவடிக்கையை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
கூடலூர்
மரப்பாலம் அரசு பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த பிறந்தநாளில் மாணவர்கள் மரக்கன்று நடும் நடவடிக்கையை ஆசிரியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு பள்ளி
கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி மரப்பாலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்பவர்களாக உள்ளனர். இவர்களின் குழந்தைகளுக்காக அங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
தற்போது அந்த பள்ளியில் சுமார் 40 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா பாதிப்பு குறைந்து பள்ளி திறக்கப்பட்டு உள்ளதால், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஆர்வமுடன் மாணவ-மாணவிகள் பங்கேற்று வருகின்றனர்.
மரக்கன்று நட்டு பராமரிப்பு
இந்த நிலையில் அந்த பள்ளியில் மாணவ-மாணவிகளில் யாருக்கேனும் பிறந்தநாள் வந்தால் இனிப்பு வழங்கி கொண்டாடப்படுகிறது. இது மட்டுமின்றி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுகிறது. இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:-
எங்கள் பள்ளியில் யாருக்கேனும் பிறந்தநாள் வந்தால் அவர்கள் கையால் மரக்கன்று நட்டு வைத்து பராமரிக்கப்படும். இதன் மூலம் மரம் வளர்ப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவை குறித்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படும் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள
ப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.