தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் மற்றும் மின் மோட்டார் திருடியவர் நேற்று கைது செய்யப்பட்டார்

தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் மற்றும் மின் மோட்டார் திருடியவர் நேற்று கைது செய்யப்பட்டார்

Update: 2021-12-03 13:38 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் மற்றும் மின் மோட்டார் திருடியவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
திருட்டு
தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவருடைய மகன் நாகராஜ் (வயது 30). இவர் தனது லோடு ஆட்டோ மூலம் தண்ணீர் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது லோடு ஆட்டோவை அந்தோணியார் கோவில் மார்க்கெட் அருகே நிறுத்தி விட்டு சென்றாராம். சிறிது நேரம் கழித்து வந்த போது, அந்த லோடு ஆட்டோவில் இருந்த மின்மோட்டார் மற்றும் செல்போனை மர்ம நபர் திருடி சென்று விட்டாராம்.
கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த நாகராஜ், தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகபெருமாள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில், தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்த ராஜ்குமார் (46) என்பவர் செல்போன் மற்றும் மின்மோட்டாரை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. உடனடியாக ராஜ்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மின்மோட்டார் மற்றும் செல்போனை போலீசார் மீட்டனர்.

மேலும் செய்திகள்