தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்து போனார்
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்து போனார்
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 10-வது தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் முரளி (வயது 15). இவருடைய நண்பர் அஜித்தின் தாயார் வீடு ஸ்டேட் வங்கி காலனியில் உள்ளது. அங்கு வீட்டுக்குள் தேங்கி கிடந்த மழைநீரை மின்சார மோட்டார் வைத்து அகற்றிக் கொண்டு இருந்தார்களாம். அப்போது முரளி, அஜித்தை பார்க்க சென்று உள்ளார். எதிர்பாராதவிதமாக முரளி மின்மோட்டார் வயரை தொட்டு விட்டாராம். இதில் முரளி மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகியது. உடனடியாக சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.