மினி லாரி மோதி ஆசிரியர் பலி

விழுப்புரம் அருகே மினி லாரி மோதி ஆசிரியர் இறந்தார்.;

Update: 2021-12-03 12:35 GMT
விழுப்புரம், 

விக்கிரவாண்டி தாலுகா கஸ்பாகாரணை கிராமத்தை சேர்ந்தவர் மோகன்தாஸ் (வயது 52). இவர் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பேரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இவர் நேற்று முன்தினம் மாலை பணியை முடித்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டார். செஞ்சி- விழுப்புரம் சாலையில் அயினம்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி லாரி, அந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

ஆசிரியர் பலி

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஆசிரியர் மோகன்தாஸ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த தகவலின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மோகன்தாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்