உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை திருமணம் செய்ய மறுப்பு
விழுப்புரம் அருகே உல்லாசம் அனுபவித்து விட்டு காதலியை திருமணம் செய்ய மறுத்த போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.;
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள பழையகருவாட்சி கிராமத்தை சேர்ந்தவர் ஜானகிராமன் மகன் இளவரசன் (வயது 30). இவர் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.
இவரும், அதே கிராமத்தை சேர்ந்தவரும், தற்போது சென்னையில் போலீஸ் ஏட்டுவாக பணியாற்றி வருபவரின் 22 வயதுடைய மகளும் கடந்த 8 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். அப்போது அந்த பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி இளவரசன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
போலீஸ்காரர் மீது வழக்கு
இந்த சூழலில் இளவரசன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கான ஏற்பாட்டில் ஈடுபட்டு வருகிறார். இதையறிந்ததும் அதிர்ச்சியடைந்த ஏட்டுவின் மகள், இளவரசனிடம் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி கேட்டார். அதற்கு அவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ஆயுதப்படை போலீஸ்காரர் இளவரசன் மீது மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.