மழையால் சேதம் அடைந்த பாலாற்றின் மேம்பாலம் சீரமைப்பு

மழையால் சேதம் அடைந்த பாலாற்றின் மேம்பாலத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2021-12-03 11:56 GMT
செங்கல்பட்டு, 

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையை நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்று மேம்பாலத்தில் தொடர் மழை காரணமாக கடுமையாக சேதம் அடைந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்தநிலையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சிமெண்டு கலவை மூலம் பள்ளங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்