ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே செங்கோட்டை நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 34). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரராக பெங்களூரு யூனிட்டில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் ஓசூர் -கிருஷ்ணகிரி சாலையில் பத்தலப்பள்ளி பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவர், சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தினர்.