குளங்கள் நிரம்பியதால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

குளங்கள் நிரம்பியதால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது;

Update: 2021-12-02 22:10 GMT
நெல்லை:
தொடர் மழை காரணமாக, தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாளையங்கோட்டை குலவணிகர்புரம், வீரமாணிக்கபுரம் பகுதிகளிலும் குளங்கள் நிரம்பி மறுகால் விழுந்தது. இதனால் அங்குள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அவற்றை வடிய வைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
தாமிரபரணி ஆற்றங்கரைகளில் உள்ள பல்வேறு உறைகிணறுகளை வெள்ளம் சூழ்ந்ததால், மின் மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் பல்வேறு பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. எனவே பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.

மேலும் செய்திகள்